தோற்றமும் மாற்றமும்
இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்க இங்கிலாந்து தேசத்தின் பிஷப் கால்டுவெல்
அவர்கள் தியாகம் செய்து இந்தியாவின் தென்கோடிக்கு வந்து, ஊழியம் செய்து விதையாய்
மரித்த
திருநெல்வேலி மாவட்டத்தின் இடையன்குடியில் பிறந்தவன் நான். தேவன் எனக்கு நல்ல
பெற்றோரையும், அன்புள்ள இரண்டு சகோதரர்களையும், இரண்டு சகோதரிகளையும் தந்தார். நான்
மூன்றாம் வகுப்பு படிக்கையில் ஆலயத்தின் பாடல் குழுவில் சேர்க்கப்பட்டு பாரம்பரிய
கிறிஸ்தவனாக வளர்க்கப்பட்டேன். எனது 26வது வயதில் வாழ்வில் முற்றிலும் சமாதானத்தை
இழந்த
நான் இனி வாழ்வது வீண் என முடிவு செய்து தற்கொலை செய்துகொள்வதற்காக விஷ பாட்டிலை
வாங்கினேன். என்னை நேசித்த அநாதி தேவன் இரு சகோதரர்கள் மூலம் அந்நாளில் என்னை
சந்தித்தார். அவ்விரு சகோதரர்களும் அறிவித்த சமாதானத்தின் சுவிசேஷத்தினால்
பாவத்தில்
இருந்த நான் உணர்வடைந்தேன். தேவனிடம் பாவத்தை அறிக்கை செய்த என்னை தேவன் மன்னித்து
மீட்டு உலகம் கொடுக்கக்கூடாத சமாதானத்தை தந்தார். 1974-ம் ஆண்டு மீட்கப்பட்ட என்னை
தேவன் தமது பரிசுத்த ஆவியினால் நிரப்பினார். பாவ மன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட
ஞானஸ்நானத்தில் தேவனோடு உடன்படிக்கை செய்ய கிருபை தந்தார்.